2/15/2008 7:12:11 AM

தைப்பூசம்

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி”

இப்பூமியில் ஜீவ சக்தி விளக்கமும் மங்களத் தோற்றமும்,தெய்வீகமும் பொருந்திய காலம் தை மாதம் ஆகும். இம்மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வருகிறது.

வருடந்தோறும், உத்தராயண ஆரம்பகாலமாகிய தை மாதத்தில், ஊர் முழுவதும் செழிப்புற்று ஜீவ சக்தி விளக்கத்தோடு மிளிர்கின்றது. நம் தமிழ் மக்கள், இல்லங்களைச் சுத்தம் செய்து, மாதப் பிறப்பன்று மங்களப் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகின்றனர். எல்லோரும் அகமகிழ்ந்து விளையாடிக் க ளிக்கின்றனர். இந்த மங்களத்தோற்றம் நிறைந்த தை மாதத்தில் முழுச்சந்திரன் வரும் நாளில் பூச நட்சத்திரமும் இசைந்து வருகிறது. இதனால் இம்மாதத்திற்கு பூஜ்ய மாதம் எனப்பெயர் விளங்கும். இந்த தைப்பூச தினத்தை அருட்பெருஞ்சோதி சித்திக்குரிய தினமாக திருஅருட்பிரகாச வள்ளலாரால் வழங்கப்பட்டுள்ளது.

இன்மையின்பம்,மறுமையின்பம், போரின்பம் அனுபவத்தால் விளங்கும் ஞான நிறைவு இத்தைப்பூசத்தில் உண்டாகும்.

உயர் அறிவுடையது மனித தேகம், மனித தேகத்திற்கு இடைக்கிடை பல இடையூறுகள் தோன்றுகின்றன. பசியும், பிணியும், நரையும், திரையும், மூப்பும் முதுமையும், வினையும் மதமும், மலமும், மாயையும் இடையூறுகளாகி நம்மைக் காலம் காலமாக அலைக்கழித்து வருகின்றன.

அத்தகைய இன்னல் இடையூறுகளையும், அவலக் கவலைகளையும், அறவே விடுத்து கடவுள் அறிவைப் பெற வேண்டும்.

அசுத்த பூத அணுக்களால் ஆக்கப்பட்ட உடலினிடத்து உள்ள தத்துவங்கள் அனைத்தையும் வென்று மலமும் மாயையும் சூழப்பட்ட புண்புலால் உடலினை, கடவுள் அருளால் மாற்றி சுத்த, பிரணவ, ஞான தேகங்களைப பெற்று, கடவுளாக

விளங்குதலே ஞானநிறைவாகும்.

- ஆசிரியர்

 

RAPPER_FRUNT